Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட கூடுதல் செல்சியஸ் வெயில்!

Webdunia
சனி, 7 மே 2022 (10:44 IST)
அடுத்த 5 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என தகவல். 

 
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் தமிழகத்தில் நிலவபோகும் வெப்ப நிலை குறித்து கூறியதாவது, 
 
ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை வெப்ப நிலை மாறுபடும். 14 நாட்களுக்கு ஒரு முறையும் மாற்றம் ஏற்படும். தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் நாளை புயலாக மாறி ஆந்திரா - ஒடிசா கடலோரப்பகுதிக்கு நெருங்கி வரும். அந்த புயலின் நகர்வின் காரணமாக அதை நோக்கி காற்று மேற்கு திசையில் இருந்து செல்லும் போது தரைப்பகுதியில் வெப்ப நிலை அதிகரிக்கும்.
 
புயல் இருக்கும் வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும். அடுத்து புயலின் நகர்வைப் பொருத்து வெப்பம் குறையும். அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் கூடுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments