Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணம் கேட்டால் ‘சாதி’ சொல்லி திட்டுகிறார்கள் - சசிகலா புஷ்பா மீது புகார்

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (08:52 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் பண மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை, சசிகலா புஷ்பா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தில்லி விமான நிலையத்தில் தாக்கினர். இதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்திய அதிமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டது.
 
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள நொச்சிகுளத்தைச் சேர்ந்த காசி ஈஸ்வரன் என்பவர் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
 
அந்த மனுவில், ”மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் நாலுமாவடி அய்யா கோவிலில் மண்டபம் கட்டவேண்டுமெனக் கூறி கூலி ஒப்பந்ததாரரான என்னை அணுகினர். பணிக்காக 3 லட்சம் ரூபாய் கேட்டேன். ரூ.2.50 லட்சம் தருவதாகக் கூறினர். 20 ஆயிரம் ரூபாய் முன் பணம் கொடுத்தனர்.
 
மூன்று மாதத்தில் கோவில் மண்டபம் கட்டி முடித்த பின்பு பாக்கித் தொகையைத் தருவதாகத் தெரிவித்தனர். எனது சுமை ஏற்றும் ஆட்டோவையும் அவர்களிடம் வாடகைக்கு கொடுத்தேன். அதையும் தர மறுத்து விட்டனர்.
 
தற்போது ஆட்டோவிற்கு வேறு பெயரில் ஆர்.சி., புத்தகம் போட்டு வேறு நம்பரில் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். பாக்கித் தொகையையும் ஆட்டோவையும் கேட்டுச் சென்ற என்னை சாதியைச் சொல்லி மிரட்டி பணம் தர மறுத்து விட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக நாசரேத் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்து விடப்படும் காங்கிரஸ்.. தாக்கரே சரத்பவார் அதிரடி முடிவு..!

அஜித்தின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு காரணம் என்றால் காரி துப்புவேன்.. அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தலில் விலகிய பாஜக, அதிமுக! - திமுகவுடன் நேரடியாக மோதும் நாம் தமிழர்!

நாளை சபரிமலையில் மகரஜோதி: புல்மேடு பகுதி வழியாக பக்தர்கள் செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments