Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தமிழகத்திற்கு வரும் நாள் திருநாள்: பொன்னார்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (17:40 IST)
நேற்று தமிழகம் வந்து கோ பேக் மோடி ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிய மோடி, தற்போது மீண்டும் வரும் பிப்ரவரி 19ம் தேதியும் தமிழகம் வருகை தருகிறார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார். 

 
அதாவது, குமரி மாவட்டத்தில் மத்திய அரசு செயல்படுத்தி உள்ள சுமார் 40,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், சாலை, மற்றும் பாலங்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவும் மோடி கன்னியாகுமரி வருகிறாராம். 
 
இதோடு, கன்னியாகுமரி நான்கு வழி சாலை தொடக்க பகுதியில் (ஸீரோ பாயிண்ட்) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளாராம். இந்த செய்தியை உறுதி செய்துள்ள பாஜக முக்கிய தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இது குறித்து பேசியது பின்வருமாறு, 
டெல்லியில் இருப்பது போல் ஒரு மருத்துவமனையை நேற்று மதுரையில் வர பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் போதும் அது திருநாளாக மாறுகிறது. 
 
தமிழக முன்னேற்றத்திற்கு மத்திய அரசு லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்துள்ளது. நரேந்திர மோடி வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments