Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்தவர்களுக்காக மோடி ஒரு நிமிட அஞ்சலி கூட செலுத்தவில்லை - பிருந்தா

இறந்தவர்களுக்காக மோடி ஒரு நிமிட அஞ்சலி கூட செலுத்தவில்லை - பிருந்தா
, வெள்ளி, 25 நவம்பர் 2016 (19:30 IST)
நாடாளுமன்றத்தில் வங்கி வாசலில் இறந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மரணத்தை குறித்த ஒரு நிமிட மவுன அஞ்சலி கூட மோடி செலுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.


 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க கோரியும் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்சிஸ்ட் பிருந்தா காரத், "கூலித் தொழிலாளர்கள், பாமர மக்கள் உள்பட 86 சதவீத மக்கள் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பண நடவடிக்கை மோடியின் தோல்வியை காட்டுகிறது. இது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது.

மோடியின் கருத்துகணிப்பு ஆப்பில் அவருக்கு சாதாகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் வெளியாகி இரண்டு வாரத்தில் தீவிரவாதிகள் கையில் கிடைத்தது எப்படி? பொதுமக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகிறார்கள் என பிரதமர் மோடி கூறியிருப்பது மிகப்பெரிய பொய்.

மக்களின் சேமிப்பை மீண்டும் வங்கிக்கே கொண்டு வந்து, தவறிழைத்த அதே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக அளிப்பதே. உச்சநீதிமன்றத்தின்  கேள்விகளுக்கு மத்திய அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் வங்கி வாசலில் இறந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மரணத்தை குறித்த ஒரு நிமிட மவுன அஞ்சலி கூட மோடி செலுத்தாதது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டீ கடையில் Paytm பணம் பரிவர்த்தனை: கலக்கும் வில்லேஜ் விஞ்ஞானிகள்!