Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கே வரும் நடமாடும் திருமண மண்டபம்? திருப்பூரில் கலக்கும் நபர்!

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (17:49 IST)
கொரோனா காரணமாக திருமணங்களை விமரிசையாக நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் நடமாடும் மணவறையை வடிவமைத்துள்ளார் திருப்பூரைச் சேர்ந்த ஹக்கீம்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் தமிழகத்தில் எழுந்ததில் இருந்து திருமண மண்டபங்களில் விமரிசையாக திருமணங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஒரு திருமண மண்டபத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்தவர்கள் பலரது கனவு பலிக்காமல் போயுள்ளது.

மேலும் 50 பேருக்காக மட்டும் பெரிய மண்டபங்களில் திருமணம் வைத்து அதிக வாடகைக் கொடுத்து வீணாக்குவதையும் பலரும் விரும்பவில்லை. அதனால் சிறிய மண்டபங்களில் சிம்பிளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹக்கிம் என்ற திருமண மணவறை அலங்காரங்களை செய்துவரும் நபர், தனது கனரக வாகனத்திலேயே மிகப்பிரம்மாண்டமாக நடமாடும் மணவறையை அமைத்து மணமக்களின் வீட்டருகே மண்டபம் போல செட் அமைத்து திருமணங்களை செய்து கொடுத்து வருகிறார்.

மேலும் திருமணத்துக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலை மற்றும் சானிட்டைசர்கள் கொடுப்பது என பாதுகாப்பான முறையில் திருமணங்களை செய்து தருகிறார். இதனால் இவரிடம் இப்போது பல கல்யாண ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்