புயல் கரையை கடக்கும்வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்: ஆந்திர அரசு எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (14:51 IST)
வங்கக் கடலில் தீவிரப் புயலாக உருவாகியுள்ள மோன்தா புயல்  காக்கிநாடா அருகே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்க உள்ளது. இதன் அச்சுறுத்தல் காரணமாக, ஆந்திர மாநில அரசு கடற்கரை மாவட்ட மக்களுக்கு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தி, அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. முதன்முறையாக, புயல் தகவல்களை மக்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்கும் வகையில், குரல் வழி எச்சரிக்கை முறையையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கைபேசி குறுந்தகவல்கள் மூலமும், கடற்கரை கிராமங்களில் ஒலிபெருக்கிகள் மூலமும் புயல் நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் வெளியிடப்படுகிறது.
 
மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments