மு.க. அழகிரி அதிமுகவில் இணைவாரா ...? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் !

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (19:14 IST)
கருணாநிதி மகன் மு.க. அழகிரி அதிமுகவில் சேருவாரா என தெரியவில்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.அழகிரி பங்கேற்றார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் நிகழ்ச்சில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
 
அப்போது, அவர் பேசியதாவது :
 
நான் கருணாநிதியின் மகன் தான். என்னைப் பார்த்தால் அதிமுகவினர் கூட பேசிச் செல்கின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் கூட என்னோடு பேசுவதில்லை; இப்போது உள்ள நிலைமை எப்போது மாறும் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :
 
மு.க.அழகிரி தன் உள்ளத்தில் எழுந்த குமுறலை வெளிப்படுத்தினார். அவர் பேசியது நியாயமான கருத்து என தெரிவித்தார்.
 
மேலும்,  கருணாநிதி மகன் அதிமுகவில் இணைவாரா என்பது சந்தேகம் தான் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments