Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையில் 'பல்பு' வாங்கிய முக ஸ்டாலின்(வீடியோ)

Webdunia
புதன், 27 ஜனவரி 2016 (21:31 IST)
அம்மா அழைப்பு மையத்தை குறைகூற எண்ணி, பின்னர் அந்த எண் செயல்பட்டதால் பொதுக்கூட்ட மேடையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சங்கடப்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


 
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  பொதுக்கூட்ட மேடையில் அதிமுக ஆட்சியின் திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பேசினார்.

அப்போது, நேரடியாக நிரூபிப்பதற்காக அம்மா அழைப்பு மையதின் தொடர்பு எண் 1100யை தொடர்புக்கொண்டார். ஆனால், அது செயல்பட வில்லை என்று தெரிவித்தார். 
 
இதைத்தொடர்ந்து, உடனே, தன்னுடைய சார்பில் தனது தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கொள்ளலாம் என்று கூறிய அவர், அந்த எண்ணுக்கு முயற்சித்தார். ஆனால், அந்த எண் வேலை செய்யவில்லை. அப்போது அவர் நொந்து போனார்,
 
மறுபடியும், அம்மா அழைப்பு மையத்தை மற்றவரிடம் கூறி அழைக்க சொல்கிறார். அப்போது அம்மா அழைப்பு மையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது. இதனால், திமுக தொண்டர்களிடம் இது குறித்து பதில் கூற முடியாமல் முக ஸ்டாலின் நலுவினார். 
 
 
ஆனால், மறுபடியம் அவர், தனது தொகுதி மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எண்ணை மீண்டும் தொடர்புக்கொள்ளும்போது அந்த எண் வேலை செய்யவில்லை. இதனால் மேடையில் சங்கடப்பட்ட ஸ்டாலின், இதுகுறித்து பேசாமல் தன்னுடைய பேச்சை திசை திருப்பினார்.
 
இந்த வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு...
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Show comments