Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! – முதல்வர் ஆசிரியர் தின வாழ்த்து!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (09:27 IST)
இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், சிறந்த ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அதில் “அறிவு ஒளியூட்டி, அறியாமை இருள் அகற்றும் ஆசிரியப் பேரினமே! மனிதர்களை மதிவாணர்களாகவும், மாமேதைகளாகவும் உருவாக்குவதும், மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான்.

காலத்தால் அழிக்க முடியாத அத்தைகைய கல்வி செல்வத்தை மாணவர் செல்வங்களுக்கு அள்ளி தரும் ஆசிரியர் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சர்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments