Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேஷ்னல் அடென்ஷன் பெறும் ஸ்டாலின்: உடன் பிறப்புகள் குஷி!!

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (11:21 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவுள்ளார். 
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து வரும் 29 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.
 
இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவெனில், ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏற்கனவே சமீபத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் பதவியேற்ற போதும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற போது ஸ்டாலின் அந்த நிகழ்வில் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஆந்திரா சென்றிருந்தார். 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அகில இந்திய அளவில் முக ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments