Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்டிலேட்டர் வாங்கதானே காசு கொடுத்தார்! மறுக்காதீங்க! – செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (11:31 IST)
திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியின் நிதியை ஆட்சியர் மறுத்துள்ளது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்பாடு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரூரில் தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் வெண்டிலேட்டர்கள் தேவைப்படுவதால் எம்பி ஜோதிமணி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலம் நிதி ஒதுக்கியுள்ளார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் வாங்க நிதி ஒதுக்கி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். முதலில் ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலகம் பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியை அரவக்குறிச்சிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறி நிராகரித்துவிட்டது.

இதுகுறித்து தலைமை செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ள செந்தில்பாலாஜி ”அரவக்குறிச்சி மக்களும் கரூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் இந்த நிதியை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”இந்த சமயத்தில் அரசியல் சூழச்சி செய்யாமல் செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்க அனுமதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments