Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினர் அராஜகம்; நீதி கிடைக்க திமுக துணை: ஸ்டாலின் ஆறுதல்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (13:31 IST)
விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை. 
 
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை நேற்று இருவர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதில் அந்த மாணவி 95% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  
 
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், மாணவியின் தந்தைக்கும், முருகன் தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.  
 
இந்த முன்பகை காரணமாக ஏற்கனவே அந்த மாணவியின் சித்தப்பா  வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய நிலையில் அதிமுக பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தற்போதைய தகவலின் படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, 
 
விழுப்புரம் சிறுமியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க திமுக துணை நிற்க வேண்டும். சிறுமியின் மரணத்தில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படி செய்ய வேண்டும் என கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments