Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்மானத்தை ஆதரிக்க மனசில்லாம போயிட்டாங்க! – அதிமுக, பாஜக வெளிநடப்பு குறித்து முதல்வர்!

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (11:53 IST)
சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியபோது அதிமுக வெளியேறியது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொயர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவினருக்கு பேச அவகாசம் அளிக்கவில்லையென கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். பாஜகவினர் சிஏஏ குறித்த தீர்மானத்திற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “சட்டப்பேரவையில் பேச அனுமதி தரவில்லையென அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அவர்கள் வெளியேறியதே உண்மை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாஜக நோட்டா கட்சியா? இதுதான் ஆரம்பம்.. கருத்துக்கணிப்பு குறித்து அண்ணாமலை..!

மீண்டும் மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்.. ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அறிவிப்பு..!

இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

திகார் சிறையில் இன்று சரணடையும் அரவிந்த் கெஜ்ரிவால்.. ரிசல்ட் அன்று ஜெயிலில்..!

2 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 11.30 மணிக்கு முடிவுகள்: தேர்தல் ஆணையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments