Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு கொடுத்த இலவச அரிசியை வித்துட்டாங்க! – அமைச்சர் மீது ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (09:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றசாட்டை முன் வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் முன்கூட்டியே திமுக தமிழகம் முழுவதும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வரும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக மீது ஊழல் புகார்களை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் பேசிய அவர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா காலத்தில் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்காக வழங்கிய இலவச அரிசியை அமைச்சர் காமராஜ் வெளிசந்தையில் விற்றுவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லையென்றும், தேர்தல் நெருங்கி வருவதால் அவர் விருப்பத்திற்கு குற்றசாட்டுகளை வைத்து வருவதாகவும் அதிமுகவினர் பேசிக் கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments