Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின்தான் திமுக தலைவர் பதவிக்கு தகுதியானவர்: வாய் திறந்த கருணாநிதி

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2015 (11:47 IST)
மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் "நமக்கு நாமே" ரோடு–ஷோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் அவருக்கு ஏகோபித்த அன்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
 
ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே பயணம் முடிந்ததும் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
 
ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன நடந்தது என்பதை என்னிடம் முழு விபரமாக கூறுவார். அவர் சொல்வதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
 
திமுக வில் எனக்கு அடுத்து தலைமை பொறுப்புக்கு வருவது யார் என்று அடிக்கடி பேசப்படுகிறது. திமுக ஜனநாயக இயக்கமாகும்.
 
இங்கு பெரும்பாலானவர்களின் கருத்துக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுகிறது. நான் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுத்து அறிவிப்பது இல்லை.
 
கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளையே அறிவிக்கிறேன்.
 
தற்போதைய சூழ்நிலையில் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
 
2016 சட்டசபை தேர்தலில் 2ஜி விவகாரம் திமுக வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 2ஜி ஒதுக்கீடு வருவாய் இழப்பு வழக்கு விவகாரம் கோர்ட்டில் உள்ளது.
 
நீதிமன்ற தீர்ப்பால் திமுக பாதிப்பு அடையாது என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கருணாநிதி அப்போது கூறினார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments