Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஊரையெல்லாம் விட்டுவிட்டார்கள்! – சுட்டிக்காட்டும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (14:51 IST)
தமிழக அரசின் வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவில் சில மாவட்டங்கள், ஊர்களை சேர்க்காதது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகைசெய்யும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பல வகையான தொழிற்சாலைகள் மற்றும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களும் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மசோதா குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், இந்த பட்டியலில் திருச்சி, கரூர் மற்றும் அரியலூர் ஆகியவை சேர்க்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்பது போல ஸ்டாலினின் பேச்சு உள்ளது என ஆளுங்கட்சி வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறதாம்!

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments