முதல்வருக்கு முதுகு வலி! பசும்பொன் பயணம் ரத்து!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (09:22 IST)
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் தேவர் குருபூஜை பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை வரும் 30ம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்தார்.

ALSO READ: கேதர்நாத்தில் 101 கோடி சம்பாதித்த கழுதைகள்! சோகத்தில் ஹெலிகாப்டர்கள்!

இந்நிலையில் தற்போது அவருக்கு முதுகுத் தண்டில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதுகுவலி காரணமாக அவர் நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதனால் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் தேவர் குருபூஜையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments