Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல! – முக ஸ்டாலின் ஆவேசம்!

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2020 (10:50 IST)
நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மதுரை மாணவி நீர் தேர்வு மன உளைச்சலாம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக நீட் மன உளைச்சலாம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மேலும் ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் ”நீட் அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. நீட் மாணவர்களை நிலைகுலைய வைப்பதை அவர்களது மரணங்களே உணர்த்துகின்றன. மீண்டும் சொல்கிறேன் தற்கொலை என்பது தீர்வல்ல.. நீட் என்பது ஒரு தேர்வே அல்ல” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments