கோ பேக் சொன்ன பிரதமரிடமே கோ பேக் ஆன ஸ்டாலின்! – ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (10:04 IST)
இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும் நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்துவதற்காக டெல்லி புறப்பட்டுள்ளார். அங்கு அவர் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள் பெறுவதற்கு அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்துவது, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் முக ஸ்டாலின் பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் திமுக மற்றும் தோழமை கட்சிகள் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேகை தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில் #StalinGoBacktoModi என்ற ஹேஷ்டேகை பலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments