Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை திடீரென சந்தித்த முக ஸ்டாலின்: தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (13:53 IST)
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இருந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வித்தியாசமாக இருக்கும் என கருதப்படுகிறது 
 
இதுவரை திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் மட்டுமே தேர்தலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் வரும் தேர்தலில் புதிதாக கமல்-ரஜினி கூட்டணி, இந்த இரு திராவிட கட்சிகளின் கூட்டணிகளுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் கமல்-ரஜினி  கூட்டணிக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதில் இருந்தே இந்த புதிய கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கின்றது என்பது உறுதியாகிறது
 
கமல் ரஜினி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக அதிமுக திமுக என இரண்டு திராவிட கூட்டணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது உண்மை என அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர். எனவே இந்த கூட்டணியை பிரிக்க, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசனை, திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார் 
 
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கருதப்பட்டாலும் இதில் இருவரும் அரசியல் குறித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் கமல் ரஜினி கூட்டணிக்கு இதுவரை திமுக எந்தவித விமர்சனத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments