Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை எப்போது ?

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:06 IST)
11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை எப்போது என கேள்வி எழுந்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் பல செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா காரணமாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநில பாடத்திட்டங்களில் உள்ள மாநிலங்கள் சிலவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின் தேர்ச்சி அறிவித்தன. 
 
இந்நிலையில், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதன் விவரம் பின்வருமாறு...  
 
தேர்வு மற்றும் விகிதம்   : 
1.    10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு  (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) -  50%    
2.    11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (மதிப்பெண் மட்டும்) -  20%    
3.    12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு / அக மதிப்பீடு (internals )  -  30%  
 
இதனிடையே, 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை எப்போது என கேள்வி எழுந்துள்ளது. இதனால் இது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடனான ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த விவரம் வெளியாகும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

கடன் தொகை கடன் ரூ. 6,203 கோடி.. வசூலித்தது ரூ. 14,131 கோடி!! பணத்தை திருப்பி கேட்கும் விஜய் மல்லையா

சென்னை மெரினாவில் உணவு திருவிழா! எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல்..! - எப்போ நடக்குது தெரியுமா?

அம்பேத்கர் - அமித்ஷா விவகாரம்: கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை..!

அதிகரித்து வரும் இணைய குற்றம்: 6.69 லட்சம் சிம் கார்டுகளை முடக்கிய மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments