மருத்துவமனையில் ஸ்டாலின்; அதிர்ச்சியில் தொண்டர்கள்! – மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:24 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நல குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக அருகிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மு.க.ஸ்டாலின் “எனக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி BP மற்றும் ECG சோதனைகள் செய்யப்பட்டன. தற்போது நான் நலமுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் ஆசுவாசமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்.. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

ஈரோடு மாநாட்டுக்கு பக்கா ஏற்பாடு.. விஜய்க்கு நல்ல பெயர் வாங்கி தருவாரா செங்கோட்டையன்?

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments