Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (18:26 IST)
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பாக அனைத்து மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்தும் அதற்கான பணிகள் செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அந்த வகையில் சற்று முன்னர் இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments