இனியாவது அலட்சியம் காட்டாமல் செயல்படுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:08 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நரம்பியல் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் கொரோனாவால் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலனுக்காக பணியாற்றும் காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அரசு சரியாக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது. தமிழக அரசு கொரோனா நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments