Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோக்கர்னு பொய் சொன்ன போலி விவசாயி! – எடப்பாடியார் மீது ஸ்டாலின் தாக்கு!

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (13:04 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய திமுக கூட்டணி கட்சியினர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நேற்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியதில் கலவரம் நடந்ததால் பரபரப்பு எழுந்தது. இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்கட்சிகள் மற்றும் விவசாய சங்கள் போராட்டங்கள் நடத்தின. இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய விவசாயிகள் – திமுக கூட்டணியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள். டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்று சொன்ன போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி. பொய் வழக்குகளால் எங்களை தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments