Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்தம்பி போல் கிரண்பேடியையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (07:11 IST)
பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களின் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுவையில் ஆளுனர் கிரண்பேடி, முதல் நாராயணசாமி இடையேயான பனிப்போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. ஆளுனருக்கு எதிராக முதல்வர் நடத்தி வரும் தொடர் தர்ணா போராட்டம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக தலைவர்கள் பலர் முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுவை முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்த சின்னத்தம்பி யானையை முகாமில் அடைத்தது போல் மக்களுக்கான திட்டங்களுக்கு எதிராக முட்டுக்கட்டையாக இருக்கும் புதுவை ஆளுனர் கிரண்பேடியை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தையே திஹார் சிறையாக மாற்றி வருகிறார் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்டங்களில்..? - வானிலை ஆய்வு மையம்!

சென்னையை வெளுத்த கனமழை! மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பரிதாப பலி!

ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கி அழித்த உக்ரைன்! அமெரிக்காவின் ஐடியாவா?

அடிபொலி.. கேரளாவுக்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! - கொண்டாட்டத்தில் சேட்டன்ஸ்!

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அடுத்த கட்டுரையில்
Show comments