Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்யோசனையே கிடையாதா? அதிமுகவை சாடிய ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (13:19 IST)
அதிமுகவினர் எதையும் அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? என முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
சென்னையில் சொத்துவரி போலவே ஒவ்வொரு வீட்டினரும் ஒவ்வொரு நிறுவனத்தினரும் குப்பை வரியும் செலுத்த வேண்டும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. குப்பை கட்டணம் அறிவிப்புக்கு திமுக உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. பொதுமக்கள் மத்தியிலும் இதனால் அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. 
 
இந்நிலையில் சென்னையில் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் வசூலிப்பது காலவரம்பின்றி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின் இது குறித்து விமர்சித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. தங்கமணி. 'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? ‘எண்ணித்துணிக கருமம்’ என அதிமுக அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்! என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments