Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தொகுதியில் என்னுடன் மோத தயாரா? முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (09:43 IST)
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது 
 
குறிப்பாக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும், தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த முக ஸ்டாலின், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை மக்களின் முதல்வர் என்று கூறிக் கொள்கிறார். அவர் விபத்தில் தான் முதல்வர் ஆனார் என்று கூறினால் அதற்கு அவர் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார். அவர் உண்மையிலேயே மக்களின் முதல்வர் என்பதை நிரூபிக்க அவருக்கு நான் ஒரு வாய்ப்பு தருகிறேன். முதல்வர் பழனிசாமி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன். இருவரும் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம்
 
நான் வெற்றி பெற்றால் முதல்வர் பழனிசாமி ஊரை விட்டு ஓடிவிட வேண்டும். அவர் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு நான் விலகி விடுகிறேன்’என்று சவால் விடுத்துள்ளார். மு க ஸ்டாலினின் இந்த சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments