Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை முதல்லயே செஞ்சிருக்கலாமே! – திமுக ஆர்ப்பாட்டம் ரத்து! ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (14:43 IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தானதை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் முதல் நாள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15 தேர்வு நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இதற்கான இறுதி விசாரணை நாளை மறுநாள் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும் அறிவித்தார்.

இதனால் பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பால் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின் ” பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments