120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (22:57 IST)
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சி சமீபத்தில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஆளும் அதிமுக அரசை கண்டித்து தமிழகத்தில் 120 இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியுள்ள அவர், அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில். கண்ட ன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

அரசு விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அப்பட்டமாக அரசியல் பேசுகிறார், அமைச்சர்கள் முதல், முதலமைச்சர் வரை அனைவர் மீதும் ஊழல் புகார் உள்ளது.

காற்றாலை ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு வழக்கு போட கெடு விதித்தும் அமைச்சர் தங்கமணி, தயங்குவது ஏன்?

எனவே, அதிமுக ஆட்சி குறித்து, மக்களிடம் விளக்க   தமிழகம் முழுவதும்120 இடங்களில், கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் செல்வோம் -  மக்களுடன் செல்வோம்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்ப தலைவிகளுக்கு இன்று வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. முதல்வர் நடவடிக்கையால் மகளிர்கள் இன்ப அதிர்ச்சி..

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக்கணக்கில் பணம்.. பள்ளி, கல்லூரி படிப்புக்கும் திருமணத்திற்கும் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!

நீதிமன்றத்தில் நிகிதா அளித்த சம்மதம்.. நகைத்திருட்டு வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்..!

சிபிஐ விசாரணையை தவிர்க்கும் விஜய்!.. டெல்லிக்கு போக மாட்டார்!.. பரபர தகவல்...

கரூர் சம்பவம்!. விஜய்க்கு மீண்டும் சம்மன்!.. விடாது கருப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments