கலைஞர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:31 IST)
சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு மறைந்தார். அவரது உடல் அவரது விருப்பப்படியே மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு 2.2 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் மெரீனாவில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞரின் சாதனைகளை விளக்கும் ஒளிப்படங்கள் இடம்பெறும் வகையில் நவீனமான முறையில் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments