திமுகவில் மீண்டும் இணைகிறாரா முக அழகிரி? பேச்சு வார்த்தையில் சுமூகம் என தகவல்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (07:35 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
அந்த வகையில் திடீரென அரசியலில் மீண்டும் குதிக்க இருப்பதாக முக அழகிரி அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் முக அழகிரி பாஜகவில் சேரப் போவதாகவும் வதந்திகள் வெளியாகின
 
இந்த நிலையில் முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திமுகவில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதன்படி இருவருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் திமுகவில் முக அழகிரி சேர அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதையும், முக அழகிரி திமுகவில் சேருவாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

விஜய் தலைமையில் மெகா கூட்டணி!.. தவெக போறதே இதுக்குதான்!.. செங்கோட்டையன் போடும் ஸ்கெட்ச்!...

சேலம் இல்லனா பாண்டிச்சேரி!.. விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்!.. செம ரோட் ஷோ இருக்காம்!..

போலி ஆவணங்கள் மூலம் எச்-1பி விசா? சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி தகவல்..!

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments