Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சார்...குளத்தை காணோம்-குளத்தை காணோம் கண்டிபிடித்து தாங்க...

சார்...குளத்தை காணோம்-குளத்தை காணோம் கண்டிபிடித்து தாங்க...
, செவ்வாய், 27 அக்டோபர் 2015 (22:30 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செல்கல்பட்டு அருகே திமுக மாநாடு நடத்துவதற்காக மூடப்பட்ட 2 குளங்களை அதிகாரிகள் மீட்டனர்.

 

 
சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள ஆப்பூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலிலின் நமக்கு நாமே பயணத்தின் நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதற்காக, தனியாருக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலத்தில் பல லட்சம் பேர் கலந்துகொள்ளும் வகையில், மேடையும் மைதானமும் அமைத்து வருகின்றனர். இதற்காக 350 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், அரசுக்கு சொந்தமான 2 குளங்களையும் திமுகவினர் அரசு அனுமதி பெறாமல் சமப்படுத்தியுள்ளனர்.
 
இது குறித்து கிராம கிராம மக்கள் கோட்டாட்சியர் பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் குழு அந்த இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, குளத்தை திமுகவினர் மண்போட்டு மூடியுள்ளது தெரியவந்தது.
   
இதனையடுத்து, காவல்துறை உதவியுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த இடத்தைத் தூர்வாரி அதிகாரிகள் மீட்டனர். மேலும், அந்தக் குளத்தின் அருகே, இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று பெயர்ப்பலகையும் வைத்தனர்.
 
இந்த தகவல் அறிந்து அந்த இடத்தில் திமுகவினர் குவிந்தனர். இதனையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil