Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் பணராஜா மனைவி சுதா. பணராஜா பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் சுதா இன்று வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு, ஊரில் உள்ள தோட்டத்திற்கு விவசாயம் செய்ய சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தை அறிந்து சேடபட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் முன் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments