இதுக்கு மேல பள்ளிகளை திறக்காம இருக்க முடியாது! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (11:49 IST)
நாளை தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை முதலாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “மீதமுள்ள வகுப்புகளுக்கு அடுத்தடுத்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகள் நெருங்கி வருவதால் இதற்கு மேல் பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments