மக்கள் நம்பிக்கை வைக்கணும்.. அதான் முக்கியம்! – தடுப்பூசி போட்ட அமைச்சர் அறிவுரை!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (11:28 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசிகளை கண்டு பயப்படுவதால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.

அப்போது பேசிய அவர் “நானும் இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். எனவே இனிமேல் யாரும் தடுப்பூசி குறித்த வதந்தியை பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். முன்னுதாரணமாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே நானே தற்போது இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளேன். எனவே மக்கள் நம்பிக்கையோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments