Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (12:17 IST)
எஸ்.பி ஜனநாதன் மறைவுக்கு அமைச்சர் வேலுமணி இரங்கல்
திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த எஸ்பி ஜனநாதன் திடீரென மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்தது
 
இந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமும் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது 
 
இந்த நிலையில் எஸ்பி ஜனநாதன் அவர்களின் மறைவிற்கு ஒட்டுமொத்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து தற்போது சற்றுமுன் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனநாதன் மறைவிற்கு இரங்கல் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் & திரைத்துறையினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments