Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை - அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (13:04 IST)
குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.


ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளா, தெலங்கானா மாநிலங்களில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது,

பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு நேரிட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்படவில்லை. பாதிப்பு வந்தால் உடனே அறிவிப்போம்.

குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments