நயன்தாராவும் பதில் சொல்லனும்… அமைச்சர் கறார்??

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:02 IST)
தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தகவல்.

 
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களில் இந்த தம்பதிக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த குழந்தைகள் இந்திய சட்ட விதிமுறையை  பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறை அமைத்துள்ளது 

இந்த குழுவினர் நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் பிறந்த மருத்துவமனையில் விசாரணை செய்யும் என்றும் அதன் பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை செய்யும் என்றும் முன்னர் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த விசாரணை குறித்த சமீபத்திய விவரங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்த மருத்துவமனை குறித்த விவரம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறியுள்ளார். 

Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments