Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து அலுவலகம் திறந்த தமிழக அமைச்சர்

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (05:07 IST)
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வாஸ்து பார்த்து, ஹோமகுண்டம் வளர்த்து திறப்பு விழா நடத்தியுள்ளார்.
 

 
தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன். இவர், திண்டுக்கல் திருச்சி சாலையில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகம் வனத்துறை அமைச்சர் அலுவலகமாக வியாழனன்று திறக்கப்பட்டது.
 
இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு முன்னதாக ஹோமகுண்டம் வளர்க்கப்பட்டு புதுமனை புகுவிழா நடத்துவது போன்று நடத்தப்பட்டது.
 
இது தவிர காம்பவுண்ட் சுவரில் உள்ள கிழக்கு கேட் மூடப்பட்டு வடக்கு பக்கமாக வாஸ்து பார்த்து, கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
 
2016ஆம் அதிமுக தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து நூறு நாட்களுக்குப் பிறகுதான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகொரியாவில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. ஆனால் முக்கிய நிபந்தனைகள்..!

மகாசிவராத்திரி தினத்தில் அசைவம் சாப்பிட்ட மாணவிகள்.. தலைமுடியை பிடித்து இழுத்த வலதுசாரி அமைப்பு..!

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் திடீர் ரத்து.. பயணிகள் தவிப்பு..!

முகமூடி தான் ஹிந்தி .. அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்: முதல்வர் ஸ்டாலின்..!

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments