அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்: புழல் சிறைக்கு அவர் மாற்றப்படுகிறாரா?

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (16:52 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவரை கைது செய்தனர். ஆனால் அவருக்கு உடல் நல குறைவு காரணமாக  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சர்ஜரிக்கு பிறகு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவேரி மருத்துவமனையில் இருந்து அவர் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments