Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகள் விளம்பர பலகை வைக்க கூடாது!– அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (10:17 IST)
தனியார் பள்ளிகள் மதிப்பெண் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு மட்டும் மதிப்பெண் முறையில் அல்லது கிரேடு முறையில் தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பர பலகையாக அமைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு மற்றும் அட்மிசன் பற்றி பேசிய அவர் “தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் பணிகள் நடைபெறாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments