கனிமொழி கவனத்துடன் இருக்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை

Webdunia
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (15:00 IST)
முக அழகிரி போல் கனிமொழியும் திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கனிமொழி கவனமாக இருக்கவேண்டும் என்றும் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் 'கனிமொழி திமுகவில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர் திமுகவில் இருந்து தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டு உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும், ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரி நிலைமை கனிமொழிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் கனிமொழி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் 
 
வேலூர் மக்களவை தேர்தலின்போது கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்வதை திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதாக ஏற்கனவே வதந்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் கனிமொழி தனி ஆவர்த்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சியினர் மத்தியில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் கனிமொழிக்கு தரப்படுவதில்லை என்று கூறப்படுவதால் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கூறிய தகவல் சரியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments