தெர்மகோலை நான் ஒன்னும் கண்டுபிடிக்கல..! – செல்லூரார் பிரச்சாரம்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (15:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ, தெர்மகோலை தான் கண்டுபிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் பிரச்சாரத்தில் பேசும்போது ”என் துறையை பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினே ஆனாலும் குறை சொல்ல முடியாது. மற்றவர்களும் நான் மதுரைக்காக பாடுபட்டதை கிண்டல் வேண்டுமானால் செய்யலாம். தெர்மகோலை நான் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் அந்த திட்டத்தை தொடங்கி வைத்தேன். அதை பலர் தெர்மகோல் ராஜூ என பரப்பி விட எதிர்கட்சிகளும் அதை பிடித்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதை பற்றி நான் கவலைப்படவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments