Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (13:42 IST)
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தபோது அறிவித்த வாக்குறுதிகளில் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்று. அதன்பேரில் தமிழகம் முழுவதும் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு “தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெற உள்ளது. முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் புதன் அல்லது வியாழக்கிழமை தமிழில் அர்ச்சனை நடைபெறும்” என கூறியுள்ளார். மேலும் ”அன்னை தமிழில் அர்ச்சனை” என்று பெயர் பலகை வைக்கப்பட்டு அர்ச்சகரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடவும் திட்டமுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments