Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்ட முடியாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (12:25 IST)
நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்ட முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

 
நாளை தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் தற்போது வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டி போடுவதால் அந்த கட்சியின் பலம் என்ன என்பது இந்த தேர்தலின் முடிவுகள் தெரியும். 
 
இந்நிலையில் நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை தமிழக அரசு குறைத்து காட்டவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை குறைத்து காட்ட முடியாது. இந்த வாரம் இருபத்தி மூன்றாவது தடுப்பூசி முகாம் நடக்கிறது. 
 
மேலும், விரைவில் குஜராத்தை போல் 10 கோடி தடுப்பூசி டோஸ் என்ற இலக்கை அடைந்து விடுவோம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments