Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க கிங் ஆக இருங்க.. ஆனா கூட்டணியில இருங்க! – நினைவூட்டும் உதயகுமார்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:05 IST)
தேமுதிக தனித்து நிற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் “கேப்டன் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென தொண்டர்கள் விரும்புகிறார்கள், தேமுதிக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள வேண்டுமென தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்” என கூறியிருந்தார். முன்னதாக மாநிலங்களவையில் தேமுதிகவிற்கு சீட் வழங்காததால் தேமுதிக தனித்து தேர்தலை சந்திக்கு முடிவில் உள்ளதோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்தை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் விஜயகாந்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் தேமுதிகவின் கூட்டணி திசை திரும்புமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டுமென விரும்புவது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உரிமை. ஆனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது” என கூறியுள்ளார்.

தேர்தல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே பல்வேறு கருத்துகள் நிலவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments