கமல் கட்சிக்கு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை – ராஜேந்திர பாலாஜி

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (19:07 IST)
அமெரிக்க முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் அமெரிக்கா செல்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்வினையாற்றி உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “எந்த முதல்வரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படைத்து வருகிறார். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறி வருகிறார். முதலீடுகளை ஈர்க்க செல்லும் முதல்வர் அமெரிக்காவில் நிச்சயம் வெற்றிக்கொடி நடுவார்” என பேசியுள்ளார்.

மேலும் கமலஹாசன் குறித்து பேசிய அமைச்சர் “கமலின் கட்சி மழையில் முளைத்த காளான் போன்றதுதான். அந்த கட்சிக்கென்று சரியான கொள்கைகளோ, கோட்பாடுகளோ கிடையாது” என கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலின் போது அரவக்குறிச்சியில் பேசிய கமல் “நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி” என கூறியபோது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ஒருவர். அன்று ராஜேந்திர பாலாஜி கமலுக்கு ஆற்றிய எதிர்வினைகள் மீடியாக்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments