Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகன், நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (07:51 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி ஆகியோருக்கு நீண்ட விடுப்பு அளிக்க தமிழக அரசால் முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார் 
 
நேற்று வேலூர் சிறையை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி, முருகன் மற்றும் நளினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி தமிழக அரசால் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என்றும் கூடுதலாக 30 நாட்கள் விடுப்பை நீட்டிக்க முடியும் என்றும் அதற்கு மேல் நீண்ட விடுப்பு வேண்டுமென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து நீண்ட விடுப்பு கோரிக்கை கேட்டு விரைவில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments