Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

Mahendran
வெள்ளி, 6 ஜூன் 2025 (12:35 IST)
திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா என்ற கேள்விக்கு, "தலைமைதான் முடிவு எடுக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
 
2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி மோதுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த பிறகு கூடுதல் வலிமை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், இந்த கூட்டணிகளில் தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
 
அது மட்டும் இன்றி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
 
இது குறித்து அமைச்சர் கே. என். நேரு அவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, "திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது. இது குறித்து திமுக தலைமைதான் முடிவு எடுக்கும்," என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments